காங்கிரசார் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


காங்கிரசார் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா மீது குற்றம்சாட்டும் காங்கிரசார் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

உப்பள்ளி-

பா.ஜனதா மீது குற்றம்சாட்டும் காங்கிரசார் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

தேர்தல் பிரசாரம்

தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். தேர்தல் பிரசாரம் முடிந்துள்ள நிலையில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் பா.ஜனதா அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். ரூ.2 லட்சம் கோடி வரை ஊழல் செய்துள்ளதாக கூறுகிறார்கள்.

அப்பட்டமான பொய்

இது அப்பட்டமான பொய். அவ்வளவு பணம் எங்கிருந்து கொண்டுவர முடியும். இதுதொடர்பாக சாட்சிகள், ஆதாரங்கள் இருந்தால் காங்கிரசார் வெளியிட வேண்டும். பா.ஜனதா மீது குற்றம்சாட்டும் காங்கிரசார் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன.

அவர்கள் தங்கள் மீதான புகார்களுக்கு கோர்ட்டுகளில் பதில் கூற முடியாமல் அலைகிறார்கள். உப்பள்ளியில் வீரசைவ-லிங்காயத் மக்கள் எந்த சூழ்நிலையிலும் மாறமாட்டார்கள். தேர்தல் வந்தபிறகு வீரசைவ மகாசபையை கூட்டவில்லை.

திசை திருப்ப முடியாது

சில லிங்காயத் தலைவர்கள் கூடி பேசினால் அது அனைத்து மக்களுக்குமான கூட்டம் என்று ஆகாது. தேர்தல் சமயத்தில் இதுபோல் பல சங்கங்கள் தொடங்கப்படுகின்றன. வீரசைவ-லிங்காயத் மக்கள் பா.ஜனதாவுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். அதை எந்த சக்தியாலும் திசை திருப்ப முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story