திருடப்பட்ட ஆயுதங்களை மீட்கும்வரை மணிப்பூரில் அமைதி திரும்பாது - காங். தலைவர்
திருடப்பட்ட ஆயுதங்களை மீட்கும்வரை மணிப்பூரில் அமைதி திரும்பாது என காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
கவுகாத்தி,
மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி முதல் வன்முறை அரங்கேறி வருகிறது. இந்த வன்முறையில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குகி மற்றும் மெய்தி இனக்குழுக்களுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த வன்முறையை தடுக்க பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இரு குழுக்களுக்கு இடையே தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் பாதுகாப்புப்படையினரிடமிருந்து திருடப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்களை மீட்கும்வரை மணிப்பூரில் அமைதி திரும்பாது என மக்களவைக்கான காங்கிரஸ் துணை தலைவர் கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார்.
இரு தரப்புக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையை தொடங்காதவரை அமைதி திரும்பாது என அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story