இந்தியை தேசிய மொழியாக்கும் எண்ணம் இல்லை கலந்துரையாடலில் ராகுல்காந்தி பேச்சு
இந்தியை தேசிய மொழியாக்கும் எண்ணம் இல்லை என்று கலந்துரையாடலில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மண்டியா:
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பாரத் ஜோடோ என்ற பெயரில் ஒற்றுமைக்கான பாதயாத்திரை நடத்தி வருகிறார். தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகத்தில் இந்த பாதயாத்திரை நடக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மண்டியாவில் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தி, கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ராகுல்காந்தி பேசுகையில், 'இந்தியை தேசிய மொழியாக்கி மாநில மொழிகளின் அடையாளத்தை அச்சுறுத்தும் எண்ணம் இல்லை. ஒவ்வொருவருக்கும் தாய்மொழி முக்கியம். அனைத்து மொழிகளையும் நாங்கள் மதிக்கிறோம். அரசியலமைப்பில் அனைவருக்கும் உரிமை உள்ளது' என்று பேசினார்.
Related Tags :
Next Story