இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்றுவதில் தவறு இல்லை-பசவராஜ் பொம்மை தகவல்
இந்தியாவின் பெயரை ‘பாரதம்’ என்று மாற்றுவதில் தவறு இல்லை என முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:-
முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி
அளிக்கையில் கூறியதாவது:-
மழை பெய்யவில்லை
மந்திரி சிவானந்த் பட்டீல், விவசாயிகள் இறப்புக்கு நிவாரணம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார். இதை நான் கண்டிக்கிறேன். பணத்திற்காக யாரும்
உயிரை மாய்த்துக்கொள்ள மாட்டார்கள். மாநிலத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. ஆனால் வறட்சி பகுதிகளை அறிவிக்க இந்த அரசு தயங்குகிறது.வறட்சி பகுதி அறிவிக்கப்பட்டால் புதிய கடன்கள் வழங்க வேண்டும், பயிர்களுக்கு இழப்பீடு
வழங்க வேண்டும். கர்நாடகத்தில் கடந்த 3 மாதங்களில் 172 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
எதிர்ப்பது சரியல்ல
விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை திருப்ப செலுத்த முடியாமல் கஷ்டப்படு
கிறார்கள். விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதுரை ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்
ளது. இந்து மதம் எங்கு, எப்போது பிறந்தது என்றே தெரியவில்லை என்று மந்திரி பரமேஸ்வர் சொல்கிறார்.
அவர் வேத புத்தகங்களை படிக்க வேண்டும். மதத்தை நோயுடன் ஒப்பிடுவதே ஒரு நோய் ஆகும். இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றுவதை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது சரியல்ல. இமயமலை முதல் கடல் இருக்கும் பகுதி வரை பாரதம் என்று தான் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப நமது நாடு மற்றும் நகரங்களின் பெயர்களை மாற்றினர். அந்த பெயர்களை மீண்டும் பழைய பெயருக்கு மாற்றுவதில் எந்த தவறும் இல்லை.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.