ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கின்றனர்; ஆனால் அது முடியாது - அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கின்றனர் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். மதியம் 12 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 9 மணி வரை நீடித்தது. விசாரணை நிறைவடைந்ததையடுத்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் புறப்பட்டு சென்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,
"சிபிஐ அதிகாரிகள் என்னிடம் ஒன்பதரை மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் பதிலளித்தேன். மதுபான கொள்கை முறைகேடு என்பது பொய்யான வழக்கு. இது மோசமான அரசியல். ஆம் ஆத்மி கட்சி என்பது 'கட்டார் இமாந்தர் கட்சி'. ஆம் ஆத்மியை அழிக்க நினைக்கின்றனர். ஆனால் நாட்டு மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். மக்கள் ஆதரவு இருப்பதால் எங்களை அழிக்க முடியாது" என்று கூறினார்.
Related Tags :
Next Story