மக்களின் மனதில் இடம் பிடித்ததால் அவர்கள் என்னை ஆதரிப்பார்கள் சி.டி.ரவி பேட்டி


மக்களின் மனதில் இடம் பிடித்ததால் அவர்கள் என்னை ஆதரிப்பார்கள் சி.டி.ரவி பேட்டி
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எனக்கு எதிராக எத்தனை பேர் போட்டியிட்டாலும் மக்களின் மனதில் இடம் பிடித்ததால் அவர்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று சி.டி.ரவி கூறினார்.

சிக்கமகளூரு-

எனக்கு எதிராக எத்தனை பேர் போட்டியிட்டாலும் மக்களின் மனதில் இடம் பிடித்ததால் அவர்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று சி.டி.ரவி கூறினார்.

சுயேச்சை வேட்பாளர்கள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் சிக்கமகளூரு தொகுதியில் பா.ஜனதா சார்பில் முன்னாள் மந்திரியும், கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி போட்டியிடுகிறார். நேற்று அவர் சிக்கமகளூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு(சி.டி.ரவி) எதிரான காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்), ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். மேலும் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

எத்தனை பேர்...

ஆனால் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிடும் திம்மாஷெட்டி என்பவர் திடீரென தான் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருக்கிறார். இதுபோல் பல வேட்பாளர்களை காங்கிரஸ் தன் பக்கம் இழுத்து மோசடி செய்து வருகிறது. அவர்களது பணத்தை பாழாக்கி வருகிறது. இதுபோன்ற கஷ்டம் வேறு யாருக்கும் வராது என்று கூற முடியாது.

எனக்கு எதிராக எத்தனை பேர் போட்டியிட்டாலும் என் பின்னால் சிக்கமகளூரு தொகுதி மக்கள் இருக்கிறார்கள். சிக்கமகளூரு தொகுதியில் நான் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். மருத்துவக்கல்லூரி, சாலை போக்குவரத்து, குடிநீர் வசதி உள்பட பல்வேறு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன்.

மீண்டும் ஆதரிப்பார்கள்

மேலும் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் தினமும் அரை லிட்டர் பால், ஆண்டுக்கு தலா 3 கியாஸ் சிலிண்டர்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூ.10 லட்சம் மதிப்பில் ஆயுஸ்மான் பாரத் போன்ற நலத்திட்டங்களையும் அறிவித்து இருக்கிறது.

நான் மக்களின் மனதில் இடம் பிடித்து இருப்பதால் அவர்கள் என்னை மீண்டும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். என் எதிர்பார்ப்பை அவர்கள் பூர்த்தி செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story