இது ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட் - மம்தா பானர்ஜி


இது ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட் - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 1 Feb 2023 7:31 PM IST (Updated: 1 Feb 2023 7:32 PM IST)
t-max-icont-min-icon

இது ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மக்களவையில் 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த நிலையில்,இது ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ,

இது ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட் . இது முழுக்க சந்தர்ப்பவாத பட்ஜெட். பணவீக்கம் விண்ணை முட்டும் நிலையில், வருமான வரி விலக்கினால் என்ன பயன்? பட்ஜெட்டில் வேலையில்லாதவர்களுக்கான திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.


Next Story