புட்டண்ணாவுக்கு டிக்கெட்;


புட்டண்ணாவுக்கு டிக்கெட்;
x

ராஜாஜிநகர் தொகுதி காங்கிரசார் அதிருப்தி

பெங்களூரு ராஜாஜிநகர் தொகுதியை கணக்கில் கொண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட பலர் டிக்கெட் கேட்டு வந்தனர். ரகுவீர்கவுடா உள்பட பலர் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் தங்களுக்கு டிக்கெட் வழங்குமாறு முறையிட்டு வந்தனர். மேலும் கடந்த 3 மாதங்களாக அவர்கள் ராஜாஜிநகர் தொகுதி முழுவதும் பிரசாரமும் மேற்கொண்டு வந்தனர். மக்களை கவரை அவர்களை நேரில் சந்தித்து பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் புட்டண்ணாவுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் எம்.எல்.சி.யாக இருந்தவர் ஆவார். அவர் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து பா.ஜனதாவுக்கு சென்று அங்கு டிக்கெட் கிடைக்காது என்று தெரியவந்ததால் காங்கிரசுக்கு தாவியவர் ஆவார். அவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டதால் காங்கிரசில் டிக்கெட் கிடைக்கும் என்று எதிர்நோக்கி காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதற்கிடையே முன்னாள் துணை மேயர் புட்டராஜு தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி இருக்கிறார். அவர் தனது ஆதரவாளர்களின் வேண்டுகோளை ஏற்று சுயேச்சையாக போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பா.ஜனதா சார்பில் நடிகை ரூபா அய்யருக்கு டிக்கெட்?

கன்னட திரைஉலகி பிரபல நடிகையாக இருந்து வருபவர் ரூபா அய்யர். இவர் பா.ஜனதாவில் சேர்ந்து மக்கள் பணியாற்றி வந்தார். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றடைய தீவிரமாக பணியாற்றியதாக கூறப்படுகிறது. இவரது பணியைப் பார்த்த பா.ஜனதா இவருக்கு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுவும் பெங்களூருவில் உள்ள ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் ரூபா அய்யர் போட்டியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வலுவான வேட்பாளரான சவுமியா ரெட்டி போட்டியிட இருக்கிறார். அவர் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகள் ஆவார். தற்போது ஜெயநகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக சவுமியா ரெட்டி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் ரூபா அய்யர் களம் இறங்கினால், அவருக்கும், சவுமியா ரெட்டிக்கும் கடும் போட்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.


Next Story