பட்னாவிசை துணை முதல்-மந்திரியாக்கி, பழிதீர்த்தது பா.ஜனதா; உத்தவ் தாக்கரே தாக்கு


பட்னாவிசை துணை முதல்-மந்திரியாக்கி, பழிதீர்த்தது பா.ஜனதா; உத்தவ் தாக்கரே தாக்கு
x

சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூன் மாதம் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கி, பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரியானார்.

மும்பை,

பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் கடந்த 2019 சட்டசபை தேர்தலை கூட்டணி அமைத்து சந்தித்தன. ஆனால் தேர்தலுக்கு பிறகு சிவசேனா கூட்டணியில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியை பிடித்தது. இந்தநிலையில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூன் மாதம் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கி, பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரியானார்.

இதுகுறித்து சமீபத்தில் பேசிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே கடந்த 2019-ல் எங்களுக்கு செய்த துரோகத்துக்கு, ஏக்நாத் ஷிண்டேவை வைத்து பழிதீர்த்து கொண்டோம் என்றார்.இதுகுறித்து நேற்று உத்தவ் தாக்கரே பா.ஜனதா தலைமை தேவேந்திர பட்னாவிசை முதல்-மந்திரியில் இருந்து துணை முதல்-மந்திரியாக்கி பழிதீர்த்து கொண்டுளள்து என்றார்.


Next Story