பீதர் தெற்கு தொகுதியில் போட்டியிட
காங்கிரசில் டிக்கெட் கேட்கும் தரம்சிங்கின் மருமகன்
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி மறைந்த தரம்சிங்கின் மருமகன் சந்திரா சிங். இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் பீதர் தெற்கு தொகுதியில் போட்டியிட டிக்கெட் கேட்டு வருகிறார். இந்த் நிலையில் பீதரில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பேசிய சந்திரா சிங், 'தரம்சிங்கின் மருமகனாக நான் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கேட்கவில்லை. 12 வருடமாக கட்சிக்காக உழைத்து இருக்கிறேன். மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு இருக்கிறேன். பீதர் தெற்கு தொகுதி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி இருக்கிறேன். இன்னும் அத்தொகுதியில் பல்வேறு வகைகளில் வளர்ச்சி அடைய செய்வதே எனது குறிக்கோள். அதற்கு நானே பொறுப்பு. காங்கிரஸ் கட்சி எனக்கு டிக்கெட் வழங்கும் என்று நம்புகிறேன். தேர்தலில் பீதர் தெற்கு தொகுதியில் காங்கிரசின் பலத்தை நிரூபிக்க வேண்டும். என்னை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டு வரும் அசோக் கேனி இந்த முறை குறைந்தது 5 ஆயிரம் ஓட்டுகளை கூட பெறமாட்டார். 2 முறை மந்திரியாகவும், 3 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்த பண்டப்பா காசம்பூர் மக்களுக்காக என்ன செய்தார்' என்று கூறினார்.