ஒப்பந்ததாரருக்கு ரூ.209 கோடி பாக்கி பில் பெற்று கொடுப்பதாக எடியூரப்பா மகள் பெயரை பயன்படுத்தி ரூ.40 லட்சம் மோசடி


ஒப்பந்ததாரருக்கு ரூ.209 கோடி பாக்கி பில் பெற்று கொடுப்பதாக  எடியூரப்பா மகள் பெயரை பயன்படுத்தி ரூ.40 லட்சம் மோசடி
x

ஒப்பந்ததாரருக்கு ரூ.209 கோடி பாக்கி பில் பெற்று கொடுப்பதாக எடியூரப்பா மகள் பெயரை பயன்படுத்தி ரூ.40 லட்சம் மோசடி செய்த அரசு ஊழியருக்கு போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு: பெங்களூரு நகரில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணா, அரசு ஒப்பந்ததாரர். அரசு பணிகளை எடுத்து செய்ததற்காக கோபாலகிருஷ்ணாவுக்கு ரூ.209 கோடி பில் கொடுக்கப்படாமல் பாக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், கோபாலகிருஷ்ணாவுக்கு, அவரது நண்பர் ராஜ்குமார் மூலமாக காமத் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது தனக்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகள் அருணாதேவியுடன் பழக்கம் உள்ளது. அவர் மூலமாக ரூ.209 கோடியை பெற்று கொடுப்பதாகவும், இதற்காக ரூ.25 கோடி கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பின்னர் காமத், கர்நாடக மேல்-சபையில் ஊழியராக பணியாற்றும் ரமேஷ்குமார் மற்றும் நாகலாம்பிகே ஆகிய 3 பேரும் கோபாலகிருஷ்ணாவை சந்தித்து பேசினார்கள்.

அப்போது நாகலாம்பிகே தான் எடியூரப்பா மகள் அருணாதேவியிடம் வேலை செய்வதாகவும், அவர் மூலம் பணம் பெற்று கொடுப்பதாகவும் காமத், ரமேஷ்குமார் உறுதி அளித்திருந்தனர். இதையடுத்து, ரூ.40 லட்சத்தை முதலில் அவர் கொடுத்திருந்தார். அதன்பிறகு, பில் தொகையை பெற்று கொடுக்காமலும், ரூ.40 லட்சத்தை திரும்ப கொடுக்காமலும் 3 பேரும் தலைமறைவாகி இருந்தனர். இதுகுறித்து சதாசிவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே காமத்தை கைது செய்திருந்தனர். தலைமறைவாகி விட்ட அரசு ஊழியர் ரமேஷ்குமார், நாகலாம்பிகேயை தேடிவருகிறார்கள்.


Next Story