சிவமொக்காவில் வாகன ஓட்டிகளிடம் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத ஹெல்மெட்கள் பறிமுதல்


சிவமொக்காவில் வாகன ஓட்டிகளிடம் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத ஹெல்மெட்கள்  பறிமுதல்
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில் வாகன ஓட்டிகளிடம் இருந்து ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் பி.எச்.சாலையில் உள்ள சிவப்பாநாயக் சிலை அருகே நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஐ.எஸ்.ஐ. முத்திரை பதிக்கப்படாத ஹெல்மெட் மற்றும் ஹெல்மெட் அணியாமல் பயணித்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் ஏராளமானவர்கள் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத ஹெல்மெட்டுடன் பயணித்தனர். அவர்களின் ஹெல்மெட்டை பறிமுதல் செய்த போலீசார் சிவப்பாநாயக் சிலை அருகே குவித்து வைத்தனர்.

இதையடுத்து ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை போலீசாா் எச்சரித்தனர். அப்போது ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்த தரமான மற்றும் காது பகுதியை மறைக்கும் ஹெல்மெட்டை அணிந்து வரவேண்டும் என்று கூறினர்.

மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூல் செய்த போலீசார், இனி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து பறிமுதல் செய்த ஹெல்மெட்டை மீண்டும் பயன்படுத்த முடியாதபடி அங்கேயே அழித்தனர்.


Next Story