கோவிலில் புதையல் எடுக்க குழி தோண்டிய 5 பேர் கைது
கோவிலில் புதையல் எடுக்க குழி தோண்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
துமகூரு: துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகா வெங்கட்டபுரா கிராமத்தில் 700 ஆண்டு பழமையான சோழப்புரா ஆஞ்சநேய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதையல் இருப்பதாக கருதி 5 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்குள் புகுந்து கருவறை முன்பு குழி தோண்டியுள்ளனர்.
இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது 5 பேர் கடப்பாரை கம்பி, மண்வெட்டியால் குழி தோண்டி கொண்டிருந்தனர். இதையடுத்து 5 பேரையும் பொதுமக்கள் பிடித்து பாவகடா போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், 5 பேரும் கோவிலில் புதையல் எடுக்க குழி தோண்டியது தெரியவந்தது. அவர்களை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதானவர்கள் பெயர், விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. இதுபற்றி பாவடகா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story