உமேஷ் கட்டி குடும்பத்தினருக்கு பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் ஆறுதல்
உமேஷ் கட்டி குடும்பத்தினருக்கு பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடக வனம் மற்றும் உணவுத்துறை மந்திரியாக இருந்த உமேஷ் கட்டி (வயது 61) கடந்த 6-ந்தேதி இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான பெலகாவி மாவட்டம் ஹுக்கேரி அருகே பெல்லத பாகேவாடி கிராமத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் உமேஷ் கட்டியின் இல்லத்துக்கு நேற்று பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் சென்றார். அவர் உமேஷ் கட்டியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு அருண்சிங் ஆறுதல் கூறினார். மேலும் உமேஷ் கட்டியின் சகோதரரான ரமேஷ் கட்டியிடம் உமேஷ் கட்டி இறப்பு பற்றி கேட்டறிந்தார். அதுபோல் மந்திரிகள் சுதாகர், முனிரத்னா, பைரதிபசவராஜ் உள்ளிட்டோருக்கும் உமேஷ் கட்டியின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினர், ரமேஷ் கட்டியிடம் துக்கம் விசாரித்தனர்.
Related Tags :
Next Story