சுக பிரசவத்திற்காக கர்ப்பிணியின் கணவரிடம் செவிலியர்கள் ரூ.10 ஆயிரம் லஞ்சம்


சுக பிரசவத்திற்காக கர்ப்பிணியின் கணவரிடம் செவிலியர்கள் ரூ.10 ஆயிரம் லஞ்சம்
x
தினத்தந்தி 19 Dec 2022 2:12 AM IST (Updated: 19 Dec 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

லிங்கசுகர் அரசு ஆஸ்பத்திரியில் சுக பிரசவத்திற்காக கர்ப்பிணியின் கணவரிடம் செவிலியர்கள் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கினா். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

ராய்ச்சூர்:-

சுக பிரசவத்திற்கு ரூ.15 ஆயிரம்

ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் டவுனில் தாலுகா அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் லிங்கசுகுர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நோயாளிகள், கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணிகளிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் சுக பிரசவத்தில் குழந்தை பிறக்கும் என்றும், பணம் கொடுக்காவிட்டால் அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தை பிறக்கும் என்று செவிலியர்களான அஞ்சலம்மா, கீதா ஆகியோர் கூறி வந்து உள்ளனர்.

இதனால் பயந்து போன கர்ப்பிணிகள் சுக பிரசவத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக தங்களது குடும்பத்தினரிடம் கூறி ரூ.15 ஆயிரம் லஞ்சத்தை கொடுக்க வைத்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் லிங்கசுகுரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரிடம் சுக பிரசவத்தில் குழந்தை பிறக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அஞ்சலம்மா, கீதா ஆகியோர் கூறியுள்ளனர்.

வீடியோ வைரல்

இதற்கு கர்ப்பிணியும், அவரது குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில் ரூ.10 ஆயிரம் லஞ்ச பணத்தை கர்ப்பிணியின் கணவர் அஞ்சலம்மா, கீதாவிடம் கொடுத்து உள்ளார். அந்த பணத்தை வாங்கி கொண்ட 2 பேரும், குழந்தை பிறந்து வீட்டிற்கு செல்லும் முன்பு மீதம் உள்ள ரூ.5 ஆயிரத்தை திரும்ப தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் செவிலியர்கள் லஞ்சம் வாங்குவதை யாரோ ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைத்

தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு வரும் கர்ப்பிணிகளிடம், செவிலியர்கள் மிரட்டி பணம் பறிப்பதாகவும், இதற்கு டாக்டர்கள் உடந்தையாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். மேலும் தவறு செய்த செவிலியர்கள், டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து உள்ளது.


Next Story