பெங்களூருவில் மீண்டும் டோயிங் முறை அமல்?


பெங்களூருவில் மீண்டும் டோயிங் முறை அமல்?
x
தினத்தந்தி 14 Dec 2022 3:06 AM IST (Updated: 14 Dec 2022 3:06 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் மீண்டும் டோயிங் முறை அமல்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

பெங்களூரு:-

பெங்களூருவில் ஐ.டி. நிறுவனங்கள் ஏராளமான கொட்டி கிடக்கின்றன. இதனால் பெங்களூரு நகரில் மக்கள் அடர்த்தி அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும், வாகன போக்குவரத்து அதிகரித்து நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது. இதற்கு காரணம் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்படும் வாகனங்கள் தான் என கூறப்படுகிறது. அந்த வாகனங்களை சாலையோரங்கள் நிறுத்தாமல் இருக்க, போக்குவரத்து போலீசார் அவற்றை டோயிங் முறையில் அகற்றி, உரிமையாளர்களிடம் அபராதம் விதித்து வந்தனர். எனினும் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் எண்ணிக்கை குறையவில்லை. இதற்கிடையே வாகன ஓட்டிகளின் எதிர்ப்பையடுத்து தற்காலிகமாக டோயிங் முறையை போக்குவரத்து போலீசார் கைவிட்டனர். இந்த நிலையில் தற்போது போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மீண்டும் வாகனங்களை பறிமுதல் செய்யும் டோயிங் முறையை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்து போலீசார் சார்பில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வாகனங்கள் டோயிங் செய்யப்பட்டன. தற்போது பெங்களூரு சாலைகளில் வாகன நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை டோயிங் முறையில் அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தனியார் நிறுவனம் சார்பில் அந்த வாகனங்கள் டோயிங் செய்யப்படும். இது முழுமையாக தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அந்த திட்டம் அமலுக்கு வரும் என்றனர்.


Next Story