கார்-ஸ்கூட்டர் மோதிய விபத்தில் வியாபாரி சாவு


கார்-ஸ்கூட்டர் மோதிய விபத்தில் வியாபாரி சாவு
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மண்டியாவில் கார்-ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதியதில் வியாபாரி ஒருவர் இறந்துள்ளார்.

மண்டியா:

மண்டியா மாவட்டம் கள்ளஹள்ளியில் உள்ளது பிசிலு மாரம்மா தேவி கோவில். நேற்று முன்தினம் மாலை இந்த கோவில் வழியாக பெங்களூருவில் இருந்து மைசூருவை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பிசிலுமாரம்மா கோவில் அருகே சென்றபோது கட்டுபாட்டை இழந்த கார் திடீரென்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. பின்னர் நிற்காமல் சென்ற கார், சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கியது. இதில் கார் மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற சதீஷ் (வயது 40) என்ற வாலிபர் உயிரிழந்தார்.

மேலும் காரில் இருந்த 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற மண்டியா டவுன் போலீசார் சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த 2 பேருக்கும் மண்டியா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மண்டியா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story