இலங்கை அகதி ராஜனை சிறப்பு முகாமுக்கு மாற்ற 'கெடு'


இலங்கை அகதி ராஜனை சிறப்பு முகாமுக்கு மாற்ற கெடு
x

கோப்புப்படம்

இலங்கை அகதி ராஜனை சிறப்பு முகாமுக்கு மாற்ற ‘கெடு' விதிக்கப்பட்டது.

புதுடெல்லி,

கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இலங்கை அகதி ராஜன், தன்னை முன்கூட்டியே விடுவிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரித்துவருகிறது.

ராஜன் முன் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு 3 வாரங்களுக்குள் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். அதற்குள் அவரை ஒரு வாரத்துக்குள் சிறப்பு முகாமுக்கு மாற்ற வேண்டும் என கடந்த பிப்ரவரி 24-ந்தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு நிறைவேற்றப்பட்டுவிட்டதா என நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு மனுதாரர் தரப்பில் வக்கீல் பிரபு ராமசுப்பிரமணியம், மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் ஆகியோர், நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் வருத்தம் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள், 24 மணி நேரத்துக்குள் சிறப்பு முகாமுக்கு ராஜனை மாற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

ராஜன் முன் விடுதலை குறித்து மீண்டும் பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு 3 வாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஏப்ரல் 17-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என தெரிவித்தனர்.


Next Story