தத்தா ஜெயந்தி என்ற பெயரில் அத்துமீறல்
தத்தா ஜெயந்தி என்ற பெயரில் அத்துமீறல் நடந்துள்ளது என்று போஜேகவுடா எம்.எல்.சி குற்றம் சாட்டியுள்ளார்.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூருவில் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவரும், எம்.எல்.சி.யுமான போஜேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிக்கமகளூரு தத்தா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டனர். குறிப்பாக விதிமுறை மீறி அதிகளவு கூட்டத்தை கூட்டினர். மேலும் அளவுக்கு அதிகமாக சத்தம் தரக்கூடிய ஒலிப்பெருக்கியை வைத்து ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது. ஊர்வலத்திலும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்பட்டது. மேலும் தத்தா பீடத்தில் இதுவரை இல்லாதவாறு பல இடங்களில் பூஜை நடந்துள்ளது. வழக்கமான இடத்தில் இல்லை. ஆளும் கட்சி என்பதற்காக எதை வேண்டுமென்றாலும் ெசய்யலாமா?. தத்தா பீடத்திற்கு 8 பேர் கொண்ட குழுவை நியிமித்து உள்ளது. இந்த குழுவினர் அர்ச்சகரை நியமித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதற்கு முடிவு கிைடக்க வேண்டும். அதற்கு மக்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஜனதா தளம் (எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.