நாடாளுமன்ற பொது கணக்குக்குழு தேர்தலில் திருச்சி சிவா வெற்றி
நாடாளுமன்ற பொது கணக்குக்குழு தேர்தலில் திருச்சி சிவா வெற்றிபெற்றுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் பொது கணக்குக்குழுவுக்கு 15 மக்களவை எம்.பி.க்களும், 7 மாநிலங்களவை எம்.பி.க்களும் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இதன்படி மாநிலங்களவையில் உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
இதில் மாநிலங்களவை தி.மு.க. குழு தலைவர் திருச்சி சிவா அதிகபட்சமாக 42 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. உறுப்பினர் மு.தம்பிதுரையும் பொது கணக்குக்குழுவுக்கு தேர்வு பெற்றுள்ளார். அவர் பெற்ற வாக்குகள் 16.
இதைப்போல பா.ஜனதா எம்.பி.க்கள் சுதன்சு திரிவேதி, லட்சுமண், கன்ஷியாம் திவாரி, காங்கிரஸ் எம்.பி. சக்திசிங் கோஹில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகர் ராய் ஆகியோரும் பொது கணக்குக்குழுவுக்கு உறுப்பினர் ஆகியுள்ளனர்.
Related Tags :
Next Story