பஞ்சாப்பில் லாரி-கார் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் பலி
கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதன்பின்னர், தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர்.
ஹோசியார்பூர்,
பஞ்சாப்பின் ஹோசியார்பூர் நகரில் ஜம்மு-ஜலந்தர் தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் லாரி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில், கார் தீப்பிடித்து கொண்டது. லாரி கவிழ்ந்தது.
விபத்தில் காயம் அடைந்தவர்களை அருகே இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். எனினும், காரில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதன்பின்னர், தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு வந்தனர். அவர்கள் தவுசா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, காயமடைந்தவர்களை அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர்கள் உயர் சிகிச்சைக்காக, அமிர்தசரஸ் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து நடந்தபோது, அதனை நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது, லாரி மற்றும் கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இதனை பார்த்தவுடன் போலீசுக்கு தகவல் அளித்தேன். 4 பேர் பலியாகி கிடந்தனர். போலீசார் விரைந்து வந்தனர். காயமடைந்து கிடந்த ஒருவரை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அந்த கார் இயற்கை எரிவாயுவால் இயங்கி வந்தது. அதனால், தீப்பிடித்து கொண்டது என கூறியுள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.