லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; சிறுமி சாவு
லாரி- மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுமி பரிதாபமாக இறந்தார்.
சிவமொக்கா-
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஹேலே ஒன்னூர் பகுதியை சேர்ந்தவர் பசப்பா. இவரது மகள் ஐஸ்வர்யா (வயது15). இந்தநிலையில் இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சிவமொக்கா நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது சாலையின் வளைவில் திரும்பியபோது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மோட்டார் சைக்கிளில் இருந்து பசப்பா, ஐஸ்வர்யா தூக்கி வீசப்பட்டனர். இதில் ஐஸ்வர்யா மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த பசப்பாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஹேலேஒன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஹேலேஒன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.