எர்ணாகுளம் அருகே போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த சின்னத்திரை நடிகை கைது


எர்ணாகுளம் அருகே  போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த சின்னத்திரை நடிகை கைது
x

பெரும்பாவூர்,எர்ணாகுளம் அருகே விற்பனைக்காக ரூ.6 லட்சம் போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த சின்னத்திரை நடிகையை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம்,

பெரும்பாவூர்,எர்ணாகுளம் அருகே விற்பனைக்காக ரூ.6 லட்சம் போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த சின்னத்திரை நடிகையை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திருவனந்தபுரம் மாவட்டம் களக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் அஞ்சு கிருஷ்ணா (வயது 32). சின்னத்திரை நடிகை. இவர் காசர்கோடு பகுதியை சேர்ந்த சமீர் (38) என்பவருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திருக்காக்கரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.தங்களை கணவன்-மனைவி என்று கூறிக்கொண்ட இவர்கள் 2 பேரின் நடவடிக்கைகள் அக்கம் பக்கத்தினரை சந்தேகம் அடைய செய்தது. மேலும் பல இளைஞர்களும், இளம்பெண்களும் இவர்களது வீட்டிற்கு வந்து சென்றனர். இதனால் அப்பகுதி மக்கள் திருக்காக்கரா போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.

இதன்பேரில் விரைந்து சென்ற போலீசார், அஞ்சு கிருஷ்ணா, சமீர் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தனர். இந்த சோதனையில் 56 கிராம் எடை கொண்ட எம்.டி.எம்.ஏ. எனும் ரசாயன போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தினர்.இதில் போதை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் சின்னத்திரை நடிகை அஞ்சு கிருஷ்ணாவை கைது செய்து, எர்ணாகுளம் முதல் வகுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான சமீரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story