கொல்கத்தா அருகே தொழிற்சாலையில் எரிவாயு கசிந்ததில் இருவர் உயிரிழப்பு
கொல்கத்தா அருகே கர்தாஹாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் எரிவாயு கசிந்ததில் இருவர் உயிரிழந்தனர்.
பாரக்பூர்,
கொல்கத்தா அருகே கர்தாஹாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், பி.டி சாலையில் உள்ள எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்ஸ் லிமிடெட் ஆலையில் நேற்று நடைபெற்ற பராமரிப்பு பணியின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
பராமரிப்பு பணியின் போது கார்பன் மோனாக்சைடு வாயு கசிந்ததில் ரஞ்சித் சிங் (வயது 30), ஸ்வப்னாதிப் முகர்ஜி (வயது 41) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும் மேலும் ரோஹித் மஹதோ என்ற நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பாரக்பூர் போலீஸ் கமிஷனர் அஜோய் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story