ஒரே கூண்டில் இரண்டு சிறுத்தைகள் சிறை சிக்கியது


ஒரே கூண்டில் இரண்டு சிறுத்தைகள் சிறை சிக்கியது
x

வனத்துறையினர் வைத்திருந்த ஒரே கூண்டில் இரண்டு சிறுத்தைகள் நுழைந்து சிறை சிக்கி இருக்கும் சம்பவம் மைசூர் மாவட்டம் டி நரசிபுரா தாலுக்காவை சேர்ந்த முசுவின கொப்பலூ கிராமத்தில் நடந்துள்ளது.

மைசூர்:-

தாலுகாவில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்திருந்து இதுவரை நாலு பேரை பலி வாங்கியுள்ளது, சிறுத்தைகள் கரும்பு தோட்டங்கள் மற்றும் அடர்ந்த புதர்களில் ப, அங்கே குட்டிகளை இன்று வளர்த்து வருகிறது, மாலை அல்லது அதிகாலை நேரத்தில் உணவு தேடி வந்து ஊருக்குள் நுழைந்து ஆடு, மாடு, நாய் போன்ற பிராணிகளை வேட்டையாடிக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் ஒரே தாலுகாவில் நாலு பேரைக் கொன்று பலி வாங்கியுள்ளது, இதே தாலுகாவில் இதுவரை நாலைந்து சிறுத்தைகளை சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

தாலுக்காவின் சில கிராமங்களின் அருகில் சிறுத்தைகள் நடமாட்டம் இன்னும் இருக்கிறது என்பதை அறிந்திருந்த வனத்துறையினர் முசு வினா கொப்பலூ டிராமா அருகில் இருக்கும் விவசாயத் தோட்டம் ஒன்றில் வீடு போன்ற பெரிய அளவிலான கூண்டை வைத்திருந்தார்கள், அதற்குள் கன்று குட்டி ஒன்றை கட்டிருந்தார்கள், அதை தின்னுவதற்கு வந்திருக்கும் தாய் சிறுத்தை மற்றும் அதனுடைய குட்டி சுமார் மூன்று மாதங்கள் கொண்ட கூண்டுக்குள் நுழைந்து மாற்றிக் கொண்டுள்ளது.

இன்று அதிகாலை சிறுத்தைகள் சிறை சிக்கி உள்ளது ஆனால் பொது மக்களுக்கு காலை 7 மணி அளவில் விஷயம் தெரிந்து 7.30 மணி அளவிலிருந்து சிறுத்தைகளை பார்ப்பதற்கு அக்க பக்கத்து கிராம மக்கள் அதே கிராம மக்கள் கூட்ட கூட்டமாக அதை மோதி வந்து கொண்டிருந்தார்கள் தமது செல்போன்களில் சிறுத்தைகளின் படம் பிடித்து ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வனத்துறையினருக்கு விஷய தெரிந்ததும் சுமார் 9 மணி அளவிற்கு சம்பவ இடத்திற்கு சென்று கூண்டுடன் சிறுத்தைகளை தூக்கி லாரியில் ஏற்றிசென்று அடர்ந்த வன பகுதிக்குள் கொண்டு சென்று விட்டிருப்பதாக கூறப்படுகிறது.


Next Story