புனேவில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிக்குள் விழுந்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு
புனேவில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிக்குள் விழுந்த இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
புனே,
மராட்டிய மாநிலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிக்குள் விழுந்து இரண்டு தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். புனே மாவட்டம் ரஞ்சன்காவ்ன் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு உற்பத்தி நிறுவன வளாகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் வீட்டு பராமரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறும்போது, கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் உறிஞ்சு குழாயை செருக முயன்றபோது, ஒருவர் 10 முதல் 15 அடி ஆழமான தொட்டிக்குள் தவறி விழுந்தார்.
அவரை காப்பாற்றும் முயற்சியில் இரண்டாவது தொழிலாளியும் கட்டுப்பாட்டை இழந்து தொட்டிக்குள் விழுந்தார் என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story