கட்சி தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே அவசர ஆலோசனை


கட்சி தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே அவசர ஆலோசனை
x

மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சூரத் ஓட்டலில் முகாமிட்டதை அடுத்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வர்ஷா பங்களாவில் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் சந்தித்து பேசினார்.

மும்பை,

மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சூரத் ஓட்டலில் முகாமிட்டதை அடுத்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வர்ஷா பங்களாவில் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் சந்தித்து பேசினார். அப்போது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல அவர் தொடர்பில் உள்ள எம்.எல்.ஏ.க்களையும் வர்ஷா பங்களாவுக்கு அழைத்து பேசினார். இதுதவிர காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் அவர்களது எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தினர்.

இதுதவிர வர்ஷா பங்களாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் சந்தித்து ஏக்நாத் ஷிண்டே விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.


Next Story