ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க உத்தவ் தாக்கரே முடிவு

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க உத்தவ் தாக்கரே முடிவு
x

ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு சிவசேனா ஆதரவு அளிக்க உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு சிவசேனா ஆதரவு அளிக்க உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் ஜூலை மாதம் 18ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. உள்கட்சி பிரச்சினையில் தவிக்கும் சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் எம்பிக்கள் யாருக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என்ற குழப்பமான சூழல் நிலவி வந்தது. ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் முர்முவு ஆதரவு அளிப்பார்கள் என்பது தெரிந்த விஷயம் என்றாலும், உத்தவ் வசம் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், சிவசேனா கட்சியின் 16 எம்பிக்களின் ஆதரவு யாருக்கும் என்பது குறித்து கடந்த சில தினங்களாக அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்செய் ராவத் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

முர்மு பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் என்பதால் அவருக்கு ஆதரவு தருவதாக சிவசேனா கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. உத்தவ் தாக்ரேவின் இந்த முடிவு எதிர்க்கட்சி பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு பெருத்த பின்னடைவை அளித்துள்ளது.

Next Story