2023-24 மத்திய பட்ஜெட்: பிப்.01-ல் தாக்கல்?


2023-24 மத்திய பட்ஜெட்: பிப்.01-ல் தாக்கல்?
x

2023-24 மத்திய பட்ஜெட் பிப்.01-ல் தாக்கலாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

2023-2024 ஆண்டுக்கான பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன. 31ல் துவங்கி பிப்., 8 அல்லது 9ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடக்கும். இரண்டாம் அமர்வு மார்ச் இரண்டாவது வாரத்தில் துவங்கி, மே முதல் வாரத்தில் நிறைவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் ஜன. 31-ல் கூடுகிறது.

2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பிப்., 01ல் தாக்கல் செய்து உரையாற்றுகிறார். இந்தபட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, பார்லிமென்டின் புதிய கட்டடத்தில் நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story