தேவேகவுடாவிடம் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் நலம் விசாரித்தார்
தேவேகவுடாவிடம் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் நலம் விசாரித்தார்
பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவேகவுடா உடல்நலக்குறைவால் பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் தேவேகவுடாவை அவரது இல்லத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் தேவேகவுடா விரைவாக குணம் அடைந்து வழக்கமான பணிகளில் ஈடுபட விரும்புவதாக கூறி வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது குமாரசாமி உடன் இருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு நிர்மலா சீதாராமன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story