Normal
ஆர்.எஸ்.எஸ். குறித்து கருத்து: சித்தராமையாவுக்கு மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கண்டனம்
ஆர்.எஸ்.எஸ். குறித்து கருத்து தெரிவித்த சித்தராமையாவுக்கு மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கண்டனம் தெரிவித்துள்ளார்
பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ். குறித்து கருத்து
சித்தராமையாவுக்கு மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கண்டனம்சித்தராமையா ஆர்.எஸ்.எஸ். குறித்து கூறிய கருத்து பற்றி மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "சித்தராமையா, ராகுல்காந்தி மற்றும் முஸ்லிம்களை திருப்திப்படுத்த ஆர்.எஸ்.எஸ். குறித்து தவறாக பேசியுள்ளார். அவர் தெரியாமல் கருத்து கூறி இருந்தால் நாங்கள் அனுதாப படுவோம். ஆனால் தெரிந்து கூறி இருந்தால் இதை கண்டிக்கிறோம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கிய ஹெட்கேவார், மக்களிடையே இந்து கலாசாரம் மற்றும் தேசபக்தியை பரப்பவே அந்த அமைப்பை உருவாக்கினார். ஆரம்பத்தில் அவர் காங்கிரசில் தான் இருந்தார். அவரை பற்றி காங்கிரஸ் தலைவர்கள் பலர் எழுதிய புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளனர். இதை சித்தராமையா அறிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
Related Tags :
Next Story