மத்திய மந்திரியின் வீடு தீ வைத்து எரிப்பு - மணிப்பூரில் தொடரும் பதற்றம்


மத்திய மந்திரியின் வீடு தீ வைத்து எரிப்பு - மணிப்பூரில் தொடரும் பதற்றம்
x

மணிப்பூரில் மத்திய மந்திரியின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்பால்,

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்து வருகின்றனர். அதை அங்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் எதிர்க்கின்றன.

இதனால் அங்கு இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் பல மாவட்டங்களுக்கு பரவி வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பலர் உயிரிழந்தனர்.

வன்முறையை தடுக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மோதல் போக்கு தொடர்ந்து அதிரித்து வருகிறது.

இந்நிலையில், தலைநகர் இம்பாலில் உள்ள மத்திய மந்திரியின் வீட்டை கலவரக்காரர்கள் தீ வைத்து எரிந்தனர். மத்திய மந்திரி ஆர்கே ராஜன் சிங்கின் வீடு இம்பால் மாவட்டம் கொங்பாவில் உள்ளது. மத்திய மந்திரி ஆர்கே ராஜனின் வீட்டிற்கு நேற்று 1000க்கும் மேற்பட்டோர் கும்பலாக வந்து வீட்டை தீ வைத்து எரித்தனர்.

இந்த சமயத்தில் மத்திய மந்திரி ஆர்கே ராஜன் வீட்டில் இல்லை. இதனால் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது. தாக்குதல் நடந்த சமயத்தில் மத்திய மந்திரியின் வீட்டில் 22 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், 1000க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். மத்திய மந்திரியின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story