ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து இந்தியா விலகல்? - வெளியுறவுத்துறை மந்திரி அதிரடி பேச்சு
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து இந்தியா விரைவில் விலகும் சூழ்நிலை ஏற்படலாம் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் பல்கலைக்கழத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்த்து கிடைக்காதது குறித்து மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்,
ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராவது மிகப்பெரிய விஷயம். அது மிகவும் சுலபமாக நடந்துவிடாது. எனென்றால் உலகம் தாராளமான இடமல்ல. நாடுகள் தமக்கு கிடைப்பதற்கு போராட வேண்டும்.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் தற்போதைய கட்டமைப்பு 1945-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் முடிவை பிரதிபலிக்கும் வகையில் அந்த கட்டமைப்பு உள்ளது. 77 ஆண்டுகள் கடந்த நிலையில் உலகம் பெருமளவு மாறிவிட்டது. மிக விரைவில் உலகின் மிகவும் பிரபலமான நாடும், உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார பலம் கொண்ட நாடும் (இந்தியா) ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இல்லாத சூழ்நிலை ஏற்படும். அப்போது, பாதுகாப்பு கவுன்சில் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை கொண்டது என்பது குறித்து உங்களிடம் நான் கேட்பேன்' என்றார்.