இடைத்தேர்தல்: குடும்பமாக சென்று வாக்கு சேகரித்த அகிலேஷ் யாதவ்..!!


இடைத்தேர்தல்: குடும்பமாக சென்று வாக்கு சேகரித்த அகிலேஷ் யாதவ்..!!
x

முலாயம் சிங் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் குடும்பமாக சென்று அகிலேஷ் யாதவ் வாக்கு சேகரித்தார்.

இடாவா,

சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மறைவால் காலியான அவரது மெயின்புரி எம்.பி. தொகுதியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் முலாயம் சிங்கின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் ரகுராஜ் சங் சைகியா களமிறக்கப்பட்டு உள்ளார்.

இந்த தேர்தலுக்காக சமாஜ்வாடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளது. சைபாயில் நேற்று நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் தனது சித்தப்பாவும், பிரகதிஷீல் சமாஜ்வாடி தலைவருமான சிவபால் சிங், ராம்கோபால் யாதவ் என குடும்பத்தினருடன் அகிலேஷ் யாதவ் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசார மேடையில் தனது சித்தப்பா சிவபால் சிங்கின் காலை தொட்டு வணங்கினார். இது சமாஜ்வாடி தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அகிலேசின் இந்த செயலால் நெகிழந்த சிவபால் சிங் யாதவ், தங்கள் குடும்பம் ஒன்றாக இருப்பதாகவும், தங்கள் உறவில் எப்போதும் விரிசல் இல்லை என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இருவரும் பா.ஜனதாவை கடுமையாக குற்றம் சாட்டினர். இடைத்தேர்தலில் தங்கள் கட்சி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெறும் எனவும் கூறினர்.


Next Story