பெங்களூருவில் வருகிற 10-ந்தேதி ஜனதாதளம்(எஸ்) கட்சி மாநாடு- தேவேகவுடா பேட்டி


பெங்களூருவில் வருகிற 10-ந்தேதி ஜனதாதளம்(எஸ்) கட்சி மாநாடு- தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வருகிற 10-ந் தேதி ஜனதா தளம் (எஸ்) கட்சி மாநாடு நடைபெற உள்ளதாகவும், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலக மாட்டார்கள் என்றும் தேவேகவுடா கூறினார்.

பெங்களூரு:-

முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஒருங்கிணைப்பு குழு

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக தயார் ஆகுவதற்காக ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வருகிற 1-ந் தேதி முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் செய்து கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு அறிந்து கட்சி தலைமைக்கு அறிக்கை அளிக்கும். அந்த குழு பரிந்துரைக்கும் விஷயங்கள் அடிப்படையில் கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றம் செய்யப்படும்.

எங்கள் கட்சியில் குமாரசாமி தலைமையில் 19 எம்.எல்.ஏ.க்கள், 8 எம்.எல்.சி.க்கள், 12 உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்க ஒருமித்த கருத்து கூறினர். இந்த குழு பெங்களூரு மாநகராட்சி தோ்தல், மாவட்டம்-தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்கான வியூகங்களையும் வகுக்கும். எனக்கு 91 வயது ஆகிறது. மாநில கட்சியாக உள்ள ஜனதா தளம் (எஸ்) கட்சியை காப்பது தான் எனது இலக்கு. நாடாளுமன்ற தேர்தலில் நானும் பிரசாரம் செய்வேன். 91-வது வயதில் எனது அனுபவத்தை மக்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

விலக மாட்டார்கள்

எங்கள் கட்சியை விட்டு எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலக மாட்டார்கள். எங்கள் கட்சியின் மாநில மாநாடு வருகிற 10-ந் தேதி பெங்களூருவில் நடக்கிறது. இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்து கட்சி தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். ராமநகாில் மருத்துவ கல்லூரி தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் மருத்துவ கல்லூரி கனகபுராவுக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது.

சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். உத்தரவாத திட்டங்களால் மாநில அரசின் கஜானா காலியாகிவிட்டது.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.


Next Story