செப்டம்பர் மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு சாதனை!


செப்டம்பர் மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு சாதனை!
x
தினத்தந்தி 4 Oct 2022 9:55 PM IST (Updated: 4 Oct 2025 10:29 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

யு பி ஐ என்று அழைக்கப்படும் 'ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்', ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

2016ம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 678 கோடி பரிவர்த்தனை நடந்து சாதனை படைத்துள்ளது.

தேசிய பணப்பரிவர்த்தனை நிறுவனம் - நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் 678 கோடி பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி (ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை வசதி - யுபிஐ), தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த செப்டம்பர் மாதத்தில், ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

2022ம் நிதி ஆண்டில், யுபிஐ 4600 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியது. அதாவது அதன் மதிப்பு ரூ.84.17 டிரில்லியனுக்கும் அதிகமாகும்.

இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Mexquick

1 More update

Related Tags :
Next Story