உப்பள்ளி டவுனில் அலுமினிய குடோனில் பயங்கர தீ விபத்து


உப்பள்ளி டவுனில் அலுமினிய குடோனில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளி டவுனில் அலுமினிய குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது.

உப்பள்ளி;


அலுமினிய குடோன்

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் கொல்லா் காலனி பகுதியை ேசர்ந்தவர் முகமது சரீப். இவருக்கு அதே பகுதியில் சொந்தமான அலுமினிய குடோன் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குடோன் அருகில் பட்டாசுகளை வெடித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்ததில் அலுமினிய குேடான் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் வாளிகளில் தண்ணீர் பிடித்து ஊற்றி உள்ளனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

உடனே அவர்கள் இதுகுறித்து பெண்டிகேரி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் ெகாடுத்தனர். அந்த தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர்.

தீயை அணைத்தனர்

ஆனால் அதற்குள் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முற்றிலும் அணைத்தனர். இதில் தீயை அருகில் இருந்த கடைகளுக்கு பரவாமல் தீயணைப்பு படையினர் தடுத்தனர்.

இதையடுத்து பெண்டிகேரி போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பட்டாசு வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரித்தனர். மேலும் குடோனுக்குள் சென்று பார்வையிட்டனர்.

பல லட்சம் ரூபாய் பொருட்கள்

அதில் குடோனில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தான் தீவிபத்து ஏற்பட்டது ெதரியவந்தது. இந்த தீ விபத்து காரணமாக குடோனில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

இதுகுறித்து பெண்டிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story