டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகளை வாங்கினால், வெடித்தால் அபராதம்...!


டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகளை வாங்கினால், வெடித்தால் அபராதம்...!
x
தினத்தந்தி 19 Oct 2022 4:11 PM IST (Updated: 19 Oct 2022 5:09 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகளை வாங்கினால், வெடித்தால் அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட பட உள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையோட்டிக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வாங்கி வெடித்தால் ரூ.200 அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் அறிவித்துள்ளார்.

பட்டாசு தயாரித்தல், வைத்தல், விற்றால் ரூ.5,000 வரை அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பட்டாசு தடையை அமல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் ஜனவரி 1, 2023 வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story