உத்தர பிரதேசம்: சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது

சிறுமியை கடத்திச் சென்று 2 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் சவானி பகுதியில் நேற்று தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அந்த சிறுமியை ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கொண்டு சென்று இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் குற்றவாளிகள் சிறுமியை அவரது வீட்டின் அருகே இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிறுமியை அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து இந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி ஒரு குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.