மகளின் பையில் கர்ப்பத்தைக் கண்டுபிடிக்கும் கருவி கொலைசெய்த பெற்றோர்...!


மகளின் பையில் கர்ப்பத்தைக் கண்டுபிடிக்கும் கருவி கொலைசெய்த பெற்றோர்...!
x

உத்தரப்பிரதேசத்தில் மகளின் பையில் கர்ப்பத்தைக் கண்டுபிடிக்கும் கருவி இருந்ததால், அவரைப் பெற்றோர் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

லக்னோ

உத்தரப்பிரதேசத்தில் மகளிடம் கர்ப்பத்தைக் கண்டுபிடிக்கும் கிட் இருந்ததால், அவரைப் பெற்றோர் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், கவுசம்பி அருகிலுள்ள அலம்பாத் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ். இவர் தன்னுடைய 21 வயது மகளைக் காணவில்லை என்று கூறி போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் அது குறித்து விசாரித்தபோது, கிராமத்துக்கு வெளியில் அடையாளம் தெரியாத நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அதுகுறித்து விசாரித்தபோது, அது காணாமல் போன நரேஷ், ஷோபா தம்பதியின் மகள் என்று தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் இரண்டு பேரிடம் விசாரித்தனர். இருவரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். ஒரு கட்டத்தில் தங்களின் மகளை நாங்கள்தான் கொலைசெய்தோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி பிரிஜேஷ் குமார் கூறும் போது நரேஷ், மனைவி ஷோபாவுடன் சேர்ந்து தங்களின் மகளைக் கழுத்தை நெரித்து கொலைசெய்ததாகத் தெரிவித்திருக்கின்றனர். அடையாளத்தை மறைப்பதற்காக உடல் மீது ஆசிட் ஊற்றி கால்வாயில் தூக்கிப் போட்டிருக்கின்றனர். இதற்கு நரேஷ் சகோதரர்கள் இரண்டு பேர் உதவி செய்திருக்கின்றனர்.

நரேஷ் அளித்த வாக்குமூலத்தில் தன்னுடைய மகள் பல வாலிபர்களுடன் போனில் பேசிக்கொண்டிருந்ததாகவும், அவரது பையில் கர்ப்பத்தைக் கண்டுபிடிக்கப் பயன்படும் கரு இருப்பதை பார்த்ததால் ஆத்திரமடைந்ததாகவும், தன் மகளுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்டு, கோபத்தில் கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டதாகத் தெரிவித்தார்'' என்று கூறினார்


Next Story