கர்நாடகத்தில் 24¼ லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி
நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க கர்நாடகத்தில் மாடுகளுக்கு 24¼ லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மந்திரி பிரபு சவுகான் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
மந்திரி பிரபு சவான் தகவல்
பெங்களூருவில் நேற்று கால்நடைத்துறை மந்திரி பிரபு சவான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
மாநிலம் முழுவதும் தற்போது கோமாரி உள்ளிட்ட சில நோய் தாக்குதலுக்கு மாடுகள் உள்ளாகி வருகின்றன. இந்த நோய் தாக்குதலில் இருந்து மாடுகளை பாதுகாக்க தடுப்பூசி போடும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாடுகளை நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்ற சந்தைகள், பிற கால்நடைகள் கூடும் பகுதிகளுக்கு மாடுகளை அழைத்து செல்ல தடை விதிக்கவும், சந்தைகள் நடைபெறுவதற்கு தடை விதிக்கவும் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் பசு மாடுகளில் இருந்து பெறப்படும் பால், தயிர், நெய் உள்ளிட்ட பால் பொருட்களை மக்கள் சாப்பிடுவதன் மூலம், அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
இதனை கருத்தில் கொண்டு தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் இதுவரை 24 லட்சத்து 21 ஆயிரத்து 985 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 8,124 கிராமங்களில் வளர்க்கப்படும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாடுகள் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. நோய் தாக்குதலுக்கு உள்ளான 6,953 மாடுகள் செத்துவிட்டன.
இவ்வாறு மந்திரி பிரபு சவான் கூறினார்.