வடகர்நாடகத்தை தனி மாநிலமாக அறிவிக்கவேண்டும்
வடகர்நாடகத்தை தனி மாநிலமாக அறிவிக்கவேண்டும் என்று கர்நாடக மேம்பாட்டு நல போராட்டம் சங்கம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உப்பள்ளி:-
தார்வார், பெலகாவி, கலபுரகி, பீதர் உள்பட சில மாவட்டங்கள் வர்கர்நாடகத்தில் உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு அரசு சார்பிலான சலுகைகள் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மாநில அரசும் இந்த வடகர்நாடகா பகுதிகளில் எந்தவிதமான வளர்ச்சி திட்டப்பணிகளையும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பிற மாவட்டங்களை விட வடகர்நாடகாவிற்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வடகர்நாடகத்தை தனி மாநில மாக்கவேண்டும் என்று கர்நாடக மேம்பாட்டு நல போராட்டம் சங்கம் சார்பில் மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை மாநில அரசு ஏற்று கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் உப்பள்ளி கித்தூர் ராணி சென்னம்மா சர்க்கிள் பகுதியில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து அந்த சங்கத்தின் செயலாளர் குமார் ஊகார் என்பவர் கூறும்போது:- வடகர்நாடகா மாவட்டங்களுக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிதி ஒதுக்குவது இல்லை. வளர்ச்சி திட்டப்பணிகள் முடங்கியுள்ளது. குறிப்பாக கிருஷ்ணா, தூங்கப்பத்ரா கால்வாய் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வடகர்நாடகா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டால், அனைத்து சலுகைகளும் கிைடகும். வளர்ச்சி திட்டப்பணிகளும் நடைபெறும். எனவே மாநில அரசு தனி மாநிலமாக வடகர்நாடகத்தை அறிவிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.