வியட்நாம் - இந்தியா இடையே 13 புதிய வழித்தடங்களில் விமான சேவை


வியட்நாம் -  இந்தியா இடையே 13 புதிய வழித்தடங்களில் விமான சேவை
x

Image Courtesy : AFP 

புதிய வழித்தடங்களில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக வியட்ஜெட் ஏவியேஷன் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

வியட்நாமின் வியட்ஜெட் ஏவியேஷன் விமான நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் வியட்நாமுக்கும் இந்தியாவிற்கும் இடையே 13 புதிய வழித்தடங்களில் விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஏர்பஸ் ஏ330 விமானங்களைச் சேர்க்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய வழித்தடங்கள், வியட்நாமின் முக்கிய நகரங்கள் மற்றும் அதன் சுற்றுலாத் தீவான ஃபூ குவோக்கை அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூர், புது தில்லி மற்றும் மும்பையுடன் இணைக்கும் என்று வியட்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வரை வியட்நாமியில் இருந்து புது டெல்லி மற்றும் மும்பைக்கு விமான சேவையை வியட்ஜெட் வழங்கி வருகிறது.


Next Story