தமிழக பழங்குடியின பெண்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு


தமிழக பழங்குடியின பெண்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
x

100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழக பழங்குடியின பெண்களை பாராட்டினார்

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழக பழங்குடியின பெண்களை பாராட்டினார். இது தொடர்பாக அவர் தனது உரையில் கூறி இருப்பதாவது:-

தமிழக பழங்குடியின பெண்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த டெரகோட்டா குவளைகளை ஏற்றுமதி செய்தனர். தமிழ்நாட்டில் 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து வேலூரில் உள்ள நாக நதிக்கு புத்துயிர் அளித்தனர்.

பல பரப்புரைகள் பெண்களால் வழிநடத்தப்பட்டு முயற்சிகளை முன்னுக்கு கொண்டு வர இந்த நிகழ்ச்சி சிறந்த தளமாக உள்ளது. நாட்டின் பெண் சக்தியின் நூற்றுக்கணக்கான எழுச்சியூட்டும் கதைகளை மனதின் குரலில் குறிப்பிட்டு இருப்பது எனக்கு நிறைவான விஷயமாகும். நமது ராணுவமாக இருந்தாலும் சரி, விளையாட்டு உலகமாக இருந்தாலும் சரி பெண்களின் சாதனைகளை பற்றி நான் பேசும்போது அது அதிகமாக பாராட்டப்பட்டது. இவ்வாறு மோடி பேசினார்.


Related Tags :
Next Story