எனது ஆட்சியில் காபி, பிஸ்கட்டுக்கு ரூ.200 கோடி செலவு செய்யப்பட்டதா?


எனது ஆட்சியில் காபி, பிஸ்கட்டுக்கு ரூ.200 கோடி செலவு செய்யப்பட்டதா?
x

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெங்களூரு:-

கர்நாடகத்தில் நான் முதல்-மந்திரியாக இருந்தபோது (2013-2018) முதல்-மந்திரியை சந்திக்க வந்த விருந்தினர்கள், முதல்-மந்திரியின் கூட்டங்களுக்கு காபி, பிஸ்கட் மற்றும் இனிப்புகளை பரிமாறியதற்காக ரூ.200 கோடி செலவு செய்துள்ளதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் பா.ஜனதா புகார் கூறியுள்ளது. இது முற்றிலும் பொய்யானது. எனது ஆட்சி காலத்தில் காபி, பிஸ்கட் போன்றவற்றிற்காக ரூ.3.26 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டது. பா.ஜனதா பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. இதை கண்டிக்கிறேன். பா.ஜனதா பொய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. கர்நாடக மக்கள் முட்டாள்கள் அல்ல. 40 சதவீத கமிஷன், மாடால் விருபாக்ஷப்பா எம்.எல்.ஏ.வின் ஊழல் போன்றவற்றால் பா.ஜனதா அரசுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. விருந்தினர்களின் உபசரிப்புக்கு ரூ.200 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக பொய்யான தகவலை கூறி மக்களுக்கு பா.ஜனதா துரோகம் செய்துள்ளது. எனக்கு எதிராக பா.ஜனதாவினர் சதி செய்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.


Next Story