உத்தர பிரதேசத்தில் நபர் ஒருவரின் வயிற்றிலிருந்து 63 ஸ்டீல் ஸ்பூன்கள் அகற்றம்


உத்தர பிரதேசத்தில் நபர் ஒருவரின் வயிற்றிலிருந்து 63 ஸ்டீல் ஸ்பூன்கள் அகற்றம்
x

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் நபர் ஒருவரின் வயிற்றிலிருந்து 63 ஸ்டீல் ஸ்பூன்களை மருத்துவர்கள் அகற்றினர்.

முசாபர்நகர்,

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் நபர் ஒருவரின் வயிற்றிலிருந்து 63 ஸ்டீல் ஸ்பூன்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

போதைக்கு அடிமையான நோயாளி விஜய், போதை ஒழிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் கேட்டதற்கு, விஜய் ஒரு வருடமாக ஸ்பூன் சாப்பிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், விஜய்க்கு மையத்தில் இருந்த ஊழியர்கள் வலுக்கட்டாயமாக ஸ்பூன் ஊட்டியதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

32 வயதான அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது, அவரது வயிற்றில் 63 ஸ்டீல் ஸ்பூன்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

சுமார் 2 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு அனைத்து ஸ்பூன்களையும் மருத்துவர்கள் அகற்றினர். அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அவரது உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Next Story