பெங்களூருவில் நீர் நுகர்வோர் குறைதீர்வு முகாம் இன்று நடக்கிறது


பெங்களூருவில் நீர் நுகர்வோர் குறைதீர்வு முகாம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர்-வடிகால் வாரியம் சார்பில் பெங்களூருவில் நீர் நுகர்வோர் குறைதீர்வு முகாம் இன்று நடக்கிறது

பெங்களூரு:

பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் பெங்களூரு நகருக்கு காவிரி நீரை வினியோகம் செய்கிறது. இதற்காக மீட்டர் பொருத்தப்பட்டு மாதந்தோறும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீர் நுகர்வோரின் குறைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் அவ்வப்போது அந்த வாரியம் சார்பில் குறைதீர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அத்துடன் தொலைபேசி மூலமும் நுகர்வோர்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி பெங்களூருவில் நீர் நுகர்வோர் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.

குடிநீர் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருபவர்களின் புகார்களுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் நீர் நுகர்வோர் குறைதீ்ர்வு முகாம் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணி முதல் 11 மணி வரை நடக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் 1916 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களின் குறைகளை தெரிவிக்கலாம். மேலும் 8762228888 என்ற எண்ணில் உள்ள வாட்ஸ்அப்பிற்கு புகார்கள் குறித்த தகவல்களை அனுப்பலாம் என்று குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் கூறியுள்ளது.


Next Story