நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேச நேரம் கேட்டுள்ளோம் மல்லிகார்ஜுன கார்கே தகவல்

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேச நேரம் கேட்டுள்ளோம் மல்லிகார்ஜுன கார்கே தகவல்
x
தினத்தந்தி 21 March 2023 1:15 AM IST (Updated: 21 March 2023 2:40 AM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்தில் பேசிய பேச்சுக்காக, ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது.

புதுடெல்லி,

இங்கிலாந்தில் பேசிய பேச்சுக்காக, ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையில், இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ராகுல்காந்தி செவ்வாய்க்கிழமை (இன்று) நாடாளுமன்றத்தில் பேச நேரம் கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தால் அவர் பேசுவார். இங்கு இதுதான் பிரச்சினை. குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க அனுமதி அளிப்பது இல்லை. 'மைக்' இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

பாதயாத்திரையில் பேசிய பேச்சுக்காக ராகுல்காந்தி வீட்டுக்கு டெல்லி போலீசார் சென்றது கண்டிக்கத்தக்கது. பாதயாத்திரை முடிந்து 46 நாட்கள் கழித்து, இப்போது கேள்வி கேட்கிறார்கள். இது, நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் முயற்சி. எங்களை அச்சுறுத்தி பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். நாங்கள் பயப்பட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story