கர்நாடகத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு எதிராக புகார்; குழந்தைகள் ஆணையத்திற்கு 50 பக்க பதில் அனுப்பி உள்ளோம் - டி.கே.சிவக்குமார் பேட்டி


கர்நாடகத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு எதிராக புகார்; குழந்தைகள் ஆணையத்திற்கு 50 பக்க பதில் அனுப்பி உள்ளோம் - டி.கே.சிவக்குமார் பேட்டி
x

கர்நாடகத்தில் குழந்தைகள் ஆணையத்திற்கு 50 பக்க பதில் அனுப்பி இருக்கிறோம் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நோட்டீசுக்கு பதில்

ராகுல் காந்தி ஒற்றுமை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இதில் கலந்து கொள்ள சாதி, மதம், குழந்தைகள் என்ற பேதம் கிடையாது. யார் வேண்டுமானாலும் இந்த யாத்திரையில் கலந்து கொள்ளலாம். ஆனால் இதில் குழந்தைகள் தவறாக தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி கர்நாடக குழந்தைகள் ஆணையம் நோட்டீசு அனுப்பியது. அந்த நோட்டீசுக்கு நாங்கள் 50 பக்க விளக்கத்துடன் பதில் அனுப்பியுள்ளோம்.

அரசியலுக்காக குழந்தைகளை பயன்படுத்தும் நோக்கம் காங்கிரசுக்கு இல்லை. குழந்தைகளின் நலனுக்காக காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். அரசியல் உள்நோக்கத்துடன் குழந்தைகள் ஆணையத்தில் பாதயாத்திரைக்கு எதிராக சிலர் புகார் அளித்துள்ளனர். பாதயாத்திரைக்கு கிடைக்கும் மக்களின் வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசியல் எதிரிகள் இவ்வாறு செயல்படுகிறார்கள்.

கஷ்டங்களை அறிகிறார்

பாதயாத்திரை செல்லும் வழியில் மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கஷ்டங்களை கேட்டு அறிகிறார். சில ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களும் பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர். இரியூர் அருகே காங்கிரஸ் தொண்டர் ரமேஷ் என்பவர் விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு எங்கள் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story