கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கி மக்களை காப்பாற்றினோம்


கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கி மக்களை காப்பாற்றினோம்
x
தினத்தந்தி 6 March 2023 11:15 AM IST (Updated: 6 March 2023 11:19 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கி மக்களை காப்பாற்றினோம் என்று விஜய சங்கல்ப யாத்திரையில் மந்திரி ஆர்.அசோக் பேசியுள்ளார்.

பன்னரகட்டா:-

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி விஜய சங்கல்ப யாத்திரையை பா.ஜனதா தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 4 குழுக்கள் யாத்திரையை தொடங்கியுள்ளது. வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தலைமையிலான குழு, நேற்று பெங்களூரு அருகே பன்னரகட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டது. அதில் மந்திரி ஆர்.அசோக் பேசியதாவது:-

கொரோனா நெருக்கடி காலத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் வீட்டுக்குள் இருந்தனர். ஆனால் நாங்கள் தெருவுக்கு வந்து மக்களுக்கு சேவையாற்றினோம். நாடு முழுவதும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்கி உயிர்களை காப்பாற்றியுள்ளோம். சீனாவில் இன்றும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவுக்கு பலியாகி வருகிறார்கள். ஆனால் நமது நாட்டில் கொரோனா பரவல் குறைந்துவிட்டது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் திறனால் மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் சுகாதாரத்துறையை பலப்படுத்தியுள்ளோம். ஆஸ்பத்திரிகளில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் சகோதரர்களை போன்றவர்கள். அவர்களால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது. அதனால் பொதுமக்கள் வருகிற தேர்தலில் பா.ஜனதா கட்சியை ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு ஆர்.அசோக் பேசினார்.


Next Story